தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், கேப்டன் கோலி சதம் அடித்து அசத்தினார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் முதலில் மார்க்ராம் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
இதையடுத்து கலமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா ‘டக்’ அவுட்டானார். அடுத்துவந்த கேப்டன் கோலியும் ரபாடா வேகத்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டானார்.
* ஆனால் சுதாரித்த கோலி அம்பயர் முடிவை ரிவியூ செய்தார். அதில் பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் அம்பயரின் முடிவு மாற்றப்பட்டு கோலி இரண்டாவது அதிர்ஷ்ட வாய்ப்பு பெற்றார்.
இந்நிலையில் இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்திக்கொண்ட கோலி, ஒருநாள் அரங்கில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்தார்.