
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதால் மே 4, 5-ல் அந்தமான் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.