முக்கிய செய்திகள்

தென்மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்..

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.