
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. அடையாறு, மந்தைவெளி, வடபழனி, தி. நகர், அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாம்பரம், குன்றத்தூர், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.