தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : சென்னை வானிலை மையம்..

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மே-15-ந்தேதி காற்றழுத்த மண்டலமாக மாறும்.

அது மே-16-ந்தேதி காற்றழுத்த மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 16-ந்தேதி மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த காற்றமுத்தப்பகுதி புயலாக மாறி தமிழகம் நோக்கி வருமா என்பது ஓரிரு நாட்களில்தான் தெரியவரும் என வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைபெய்ய வாய்ப்பள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.: மோடி உரை குறித்து காங்., விமர்சனம்..

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் 5 அம்ச நோக்கங்களுடன் திட்டங்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி…

Recent Posts