தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு ..

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை ஆம்பன் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே இடத்தில் நீடிக்கும் எனவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

17-ம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ஆம்பன் புயல் நகர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் எந்த திசை நோக்கி செல்லும் என்பது நாளைதான் தெரியவரும் என்கின்றது வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெவித்துள்ளது

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு காணொலியில் நடைபெறுகிறது..

தமிழகத்தில் மதுக்கடைகள் : உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

Recent Posts