முக்கிய செய்திகள்

தென் தமிழகத்தில் 15-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..


15ம் தேதி வரை லட்சத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதாக தெரிவித்துள்ளார். அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். குமரிக்கடல் தெற்கே கேரள கடல் பகுதியில 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.