மேலடுக்கு சுழற்சி : தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..


மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.