முக்கிய செய்திகள்

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் ..


சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தென் மேற்கு வங்க கடல் ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இங்கு அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என தெரிவித்துள்ளது.