முக்கிய செய்திகள்

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..


சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலாடியில் 5 செ.மீ.,மழையும், சிவகங்கை மற்றும் சங்கரன் கோயிலில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.