முக்கிய செய்திகள்

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரி கடற்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வரை காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.