தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில், கட்டிடத்தின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிவதுடன், விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலில் பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச்சடங்கு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் முதலில் தீப்பிடித்ததாகவும், அதன்பின்னர் தேசிய சபை (கீழ் சபை) சேம்பருக்கு தீ பரவியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது விடுமுறை என்பதால் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவில்லை. எனவே, பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சுவரிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

”நாட்டின் பிரதமரை வரவேற்பது தமிழக அரசின் கடமை” : கனிமொழி எம்.பி. பேச்சு.

வெள்ளபாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி,குஜராத்துக்கு ஒரு நீதியா? :பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்பி கேள்வி….

Recent Posts