
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி பணிகளுக்காக தனது சகோதரர்கள்,உறவினர்கள்,நண்பர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை ஒதுக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.