சர்வதேச விண்வெளிமையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்ணில் பாய்ந்தது

சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் கடந்த 28ம் தேதி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல இருந்தனர்.

அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் காம்பளக்ஸ் 39 ஏ-ல் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது.இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்வதாக இருந்தனர்.

இருவரும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆராய்ச்சி செய்ய செல்கிறார்கள். அதிக அனுபவம் கொண்டோர் என்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை சுமந்து செல்லும் ராக்கெட் அதிகாலை 2.30 மணிக்கு விண்ணுக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பும் நாசா வீரர்களை அனுப்புவது ஒத்திவைக்கப்பட்டது. இந்த ராக்கெட் வரும் 30-ம் தேதி அதிகாலை விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததும் நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர்.

4 மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் 50 சதவித பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 8,380 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

Recent Posts