முக்கிய செய்திகள்

எஸ்.பி.பி. மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் : எஸ்.பி.பி. சரண்..

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.