7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மீது 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு 3 எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

எம்.எல்.ஏக்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சமீபத்தில் சபாநாயகர் தனபாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்ததாக எம்.எல்.ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு,அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பதாக எழுந்த புகாரில் எம்.எல்.ஏக்கள் மூவரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதே நேரம், சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

வந்த புயல்களுக்கு கெஞ்சியும் கொடுக்காதவங்க, வராத புயலுக்கு முன் கூட்டியே கொடுக்கும் மர்மம் என்னவோ…: செய்தியாளர் எழுப்பும் கேள்வி

சொன்னாங்க… செஞ்சுட்டாங்க… : சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்

Recent Posts