சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து : கனிமொழி எம்.பி கண்டனம்..

தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது டிவிட் பதிவில்

தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது.

பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை. என பதிவிட்டுள்ளார்.