முக்கிய செய்திகள்

லண்டனின் சட்டம் படித்து பட்டம் வாங்கிய ஸ்ரீப்ரியா மகள்!

Sri Priya’s Daugter’s Graduation in London 

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் ஸ்னேகா சேதுபதி லண்டனில் சட்டம்படித்து பட்டம் வாங்கியுள்ளார் .இந்த பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீப்ரியா – ராஜ்குமார் சேதுபதி தம்பதியும் கலந்து கொண்டு மகளை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட படத்தை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக திரையுலகில் புகழ் பெற்ற நடிகைகள், தங்களது மகளையும் நடிகையாக்கவே விரும்புவர். ஆனால், ஸ்ரீப்ரியா இதற்கு மாறாக தனது மகளை சட்டம் படிக்க வைத்து வழக்கறிஞராக்கி இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக மகள் சினேகாவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ஸ்ரீப்ரியா. அப்போதே, நடிக்க வருவீர்களா என்ற கேள்விக்கு தமக்கு வழக்கறிஞராக வரவேண்டும் என ஆசை என சினேகா பதிலளித்திருந்தார். அதன் படி தற்போது படிப்பையும் முடித்துள்ளார். சினேகாவின் அழகான தோற்றம் அவர் ஏன் நடிக்க்க கூடாது என பலரையும் கேட்க வைப்பது இயல்பானதே..!