முக்கிய செய்திகள்

பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் ..


பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார் . ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன் காலடியைப் பதித்தவர். துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

ஸ்ரீதேவி மறைவுக்கு சில நிமிடங்கள் முன் அமிதாப் பச்சன் பகிர்ந்த ட்வீட் வைரலாகி வருகிறது. நேற்றிரவு 1.15 மணியளவில் அமிதாப் பச்சன் ட்விட்டரில் ‘ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது.