
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மொஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் இமாலய ரன் குவிப்பால் இலங்கை அணி ஃபாலோ ஆன் ஆனது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.
முதல் டெஸ்ட் முடிவில் இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.