ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் சொர்க்கவாசலான பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது.

விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாகவும் போற்றப்படும்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 26–ந்தேதி தொடங்கியது.

அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக நம்பெருமாள் கருவறையிலிருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டுத் திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து செர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் சென்றடைந்தார்.
இந்த விழாவிற்க்காக திருச்சி மாநகர காவல் துறை தலைமையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதுபோல் தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை திமுக உள்பட எதிர்கட்சிகள் புறக்கணிப்பு ..

தங்கம் விலை கிடுகிடு உயர்வு ..

Recent Posts