
ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்கள்.

அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை திருவண்ணாமலை ஆதீனம் சார்பில் குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்கள்.

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் கலைக்கல்லுாரியின் செயலர் பேராசிரியர் முனைவர் சங்கரநாராயணன் மற்றும் திருவண்ணாமலை ஆதீனத்திற்குட்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லுாரியின் நிர்வாக அலுவலர் பேராசிரியர் சுந்தரம் மற்றும் கல்லுாரியின் முதல்வர் பேராசிரியர் ரவிசங்கர், நாச்சிமுத்து குன்றக்குடி மக்கள் கல்வி நிலையம் இயக்குனர் பொறியாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்