முக்கிய செய்திகள்

சிரியாவின் அரசு விமான படைத்தளத்தில் அமெரிக்கா தாக்குதல்:100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..

சிரியாவின் தைமூர் ராணுவ விமான படைத்தளத்தின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 1200 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த போர் இடையில் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

இதில் சிரியா ராணுவம் கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்தி இருக்கிறது. இந்த குண்டுகள் பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும். இது பெரிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கியது.

சிரியா அரசு படையின் இந்த மோசமான நடவடிக்கைக்கு நேற்று அமெரிக்க அதிபர் எதிர்ப்பு தெரிவித்தார். டொனால்ட் டிரம்ப் இது குறித்து ”சிரியா நடத்திய கெமிக்கல் குண்டு தாக்குதலை பொறுத்துக் கொள்ள முடியாது. சிரியா, ஈராக், ரஷ்யா மூன்று நாடுகளும் சேர்ந்து போர் விதிமுறைகளை மீறி வருகிறது. சிரியா அதிபர் இதில் மிகவும் மோசமாக நடந்து வருகிறார்” என்று குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் அமெரிக்க விமானம்தான் அங்கு பறந்து சென்றது என்று சிரியா அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த போரை பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவு செய்வதை மட்டுமே அமெரிக்கா விரும்புகிறது, இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தவில்லை என்று அந்நாடு கூறியுள்ளது.