
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இணையதளம் வாயிலாகவோ நேரடியாகவோ பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3,261 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்த உள்ளது. பல்நோக்கு பணியாளர்கள், பெண்கள் படைப்பிரிவு பயிற்றுநர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.