முக்கிய செய்திகள்

எஸ்எஸ்எல்சி, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை!

SSLC, +1, +2 Exams Time taple

எஸ்எஸ்எல்சி, +1, +2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு தேர்வுகள் இயக்குநகரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள், கணிதம், விருப்ப மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 8 பாடங்களுக்கான தேர்வுகள் பத்தாம் வகுப்புக்கு நடைபெறுகின்றன.

இதேபோல், பதினோராம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 16 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. மொழிப்பாடம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள், கணக்கு, உயிரியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் உள்ளிட்ட 33 பாடங்களுக்கு 11 வேலை நாட்களில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்புக்கு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6 ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள், வணிகவியல் இல்ல அறிவியல், புவியியல், கணிதம், உயிரியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் உள்ளிட்ட 28 பாடங்களுக்கு 11 வேலை நாட்கள் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதிகளுக்கான முழுமையான அட்டவணைக்கான இணைப்பு கீழே உள்ளது…

 SSLC_HSEI_HSEII_Mar2018_Timetable-