முக்கிய செய்திகள்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி : காரைக்குடி கேந்திர வித்யாலயா பள்ளி சாதனை..

கேந்திர வித்யாலய பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் காரைக்குடி கேந்திர வித்யாலய பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு பதக்கங்களை வென்று தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் மாநில அளவிலான கேந்திர வித்யாலய பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டிகளில் காரைக்குடி கேந்திர வித்தியாலய பள்ளி அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது. மாணவர்கள் பிரிவில் தங்கம்-2, வெள்ளி-6,வெண்கலம்-3.

மாணவிகள் பிரிவில் தங்கம்-6, வெள்ளி-7, வெண்கலம்-1 வென்றனர்.

மாணவர்கள் தடகளப் பிரிவில் ஸ்ரீநிதி 800மீ. ,1500 பிரிவில் தங்கம் வென்றார்., அரவிந்த் 200 மீ பிரிவில் வெள்ளி வென்றார்.

இருவரும் கேந்திர வித்யாலய பள்ளிகளுக்கிடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

அது போல் மாணவிகள் தடகளப் பிரிவில் சிவசங்கரி,-200மீ, சுபாஷினி-100மீ, 400 மீ பிரிவில் தங்கம் வென்றனர் இவர்கள் இருவரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

மாநில அளவில் ஒட்டு மொத்த சாம்பியனில் மூன்றாம் இடத்தை பிடித்தது மாணவிகள் சாதனை புரிந்தனர்…

பாட்மிட்டன் பிரிவில் தங்கம்-1, வெண்கலம்-1 வென்றனர்.

தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க மாணவிகள் நித்திகா,கிருஷா ஸ்ரீ, திவ்யபாரதி தகுதி பெற்றனர்.

செஸ் போட்டியில் செந்தமிழ் செல்வன் தேசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பதக்கங்களையும்,சாதனைகளையும் புரிந்து தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவ,மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ரவிந்திரன், உடற்கல்வி ஆசிரியர் இளங்கோ உள்பட ஆசிரியர்கள் பாராட்டும்,வாழ்த்தும் தெரிவித்தனர்.