கரோனா நிவாரண நிதியாக அனைத்து அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.முதல் கட்டமாக ₹2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கும் திட்டம் மே16 முதல் அமலாகும்.
நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்,
தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் .
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்