ரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா – விசாகன் திருமணத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை சௌந்தர்யா – விசாகன் திருமணம் நடைபெற்றது. 

திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமது மனைவி துர்கா ஸ்டானுடன் சென்று கலந்து கொண்டார். முன்னதாக நடிகர் தனுஷ் வாசலுக்கே வந்து ஸ்டாலினை வரவேற்றார்.  

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன், வைகோ, திருநாவுக்கரசர், மு.க.அழகிரி, தமிழருவி மணியன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.  

ரஜினிகாந்தின் உறவினர்களும் திரையுலக பிரபலங்களுமான கஸ்தூரி ராஜா, செல்வராகவன், தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர். 

இயக்குனர் பி.வாசு, நடிகர் பிரபு, வைரமுத்து , ஒய்.ஜி.மகேந்திரன், விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், ஹரி, எஸ்.ஏ சந்திரசேகர், நடிகைகள் குஷ்பு, மீனா, ஆண்ட்ரியா ஆகியோரும் செளந்தர்யாவின் திருமணத்தில் பங்கேற்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தாவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..

சென்னை டி.எம்.எஸ். – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

Recent Posts