
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் ரூ.10 லட்சம் கரோனா நிதி வழங்கினார்.
முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் .

அவருடனான சந்திப்பின் போது சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்