முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களை ஏமாற்ற வேண்டாம்: ஸ்டாலின்

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

ஆலை மூடப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்ற நிலையில், “சுற்றுச்சூழல் மாசுக்கு ஆலை மட்டும் காரணமில்லை” என மத்திய நீர்வளத்துறை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. மக்களுக்கு எதிரான இந்த அறிக்கையை உடனடியாக மத்திய அரசு திரும்பபெற வேண்டும்!

இதற்கு தலைமைச் செயலாளர் மூலமாக “எதிர்ப்புக் கடிதம்” எழுதி தமிழக மக்களை ஏமாற்றி திசை திருப்புகிற வேலையை தமிழக அரசு மேற்கொள்ளாமல், உடனடியாக, இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதோடு, இந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்திலும் நிராகரித்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்!

Stalin Emphasis in Sterlite Issue