போராட்டத்திற்காக போடும் வழக்கை பெருமையுடம் ஏற்போம்: ஸ்டாலின்

காவிரி உரிமையைக் கோரிப் போராட்டம் நடத்தியதற்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்கத் தயார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

காவிரி மீட்புப் பயணத்தில் பங்கேற்பதற்காக திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

இந்த மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும். பயணத்தை இரு குழுக்களாக  தொடர்கிறோம். அதன்பின் கடலூரில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறோம்.

பின்னர் கடலூரிலிருந்து சென்னை வந்து ஆளுநரைச் சந்திப்போம். ஆனால் பிரதமர் யாரையும் சந்திக்க தயாராக இல்லை. தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கேட்டாலும் அவர் அனுமதி தரமாட்டார். எனவே கருப்புகொடி  காட்டி பிரதமரை சந்திக்க உள்ளோம்.

காவிரிக்காக எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை மனமார ஏற்றுக்கொள்ள தயார். ஜெயலலிதா போன்று சொத்து குவிப்பு வழக்குகளை ஏற்பதைவிட காவிரி விவகாரத்தில் போராட்டம் நடத்தியதற்காக எத்தகைய வழக்குகள் எங்கள் மேல் போடப்பட்டாலும் அவற்றைப் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

Stalin Interview

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா இன்று கோலாகல தொடக்கம்

முன்னாள் எம்எல்ஏ ஜமீன் கே.கே.பி.முத்தையா காலமானார்..

Recent Posts