முக்கிய செய்திகள்

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..


அரசு ஊழியர் சங்கங்கமானள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்த அறிவித்தனர். போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ வினரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கதுபோராட்டம் அறிவித்த உடனே அவர்களிடம் அரசு பேசி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை என்றார்.மேலும் அவர் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை .ஆணவத்தின் உச்சாணி கொம்பில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.