முக்கிய செய்திகள்

மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்திப்பு..


திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பென்னிகுயிக் வாரிசுகள் சந்தித்தனர். முல்லைப் பெரியாறு அணையைத் தன் சொந்தச் செலவில் பென்னிகுயிக் கட்டினார்.

அந்த அணையால்தான், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பூர்த்தியாகின்றன. அந்த ஊர்களில் சுபகாரியங்களுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களில், கடவுள் படங்களுக்குப் பதில் பென்னிகுயிக் படம் இடம்பெறும்.

அந்தளவுக்கு அந்த மாவட்ட மக்களின் மனங்களில் பென்னிகுயிக் நிலைத்து நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட வந்த பென்னிகுயிக் வாரிசுகள் பொங்கலை கொண்டாடினர் பின்னர் இன்று சென்னை வந்த அவர்கள் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலினுடன் சந்தித்து பேசினர்.