முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் : ஆர்.எஸ் பாரதி கண்டனம்..

கருப்பர் கூட்டத்திற்கு திமுக அதரவுஎன ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு உலாவருவதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆர்எஸ்.பாரதி.

அப்போது அவர் திமுக மீது சிலர் திட்டமிட்டு இந்துகளுக்கு எதிரான கட்சி என பொய்களை பரப்பி வருகிறார்கள். திமுகவில் 1 கோடிக்கு மேல் இந்துகள் உள்ளனர்.

கலைஞர் ஆட்சியில் இந்து கோயில்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டன என ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.

திமுக 5 முறை ஆட்சி செய்தபோது ஏராளமான கோயில்கள் சீரமைக்கப்பட்டன. திருவாரூர் தேரை ஓட வைத்தவர் திமுக தலைவர் கலைஞர் எனவும் தெரிவித்துள்ளார்.

கபாலீஸ்வரர் கோயில் குளம் சீரமைக்கப்பட்டதும் கலைஞர் ஆட்சியில் தான் எனவும் கூறியுள்ளார்.