மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி. அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் நேற்று மாலை காலமானார்.

அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, எம்.பி., ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.