தமிழகத்தில் தங்களது பினாமி அரசு உள்ளது என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சோபியா மீதான வழக்குகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும் இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்
— M.K.Stalin (@mkstalin) September 4, 2018
Stalin Slams BJP in Twitter