முக்கிய செய்திகள்

மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் விரோத அரசு: சிவப்புச் சட்டையுடன் வந்து சீறிய ஸ்டாலின்

மத்தியிலும், மாநிலத்திலும் தொழிலாளர்களுக்கு விரோதமான ஆட்சியே நடைபெற்று வருவதாகவும், இரு ஆட்சிகளையும் அகற்ற இந்நாளில் உறுதி ஏற்பதாகவும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மே தினத்தை ஒட்டி சென்னை மே தினப்பூங்காவுக்கு வருகை தந்த அவர், அங்குள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சிப்பு நிறச்சட்டை அணிந்து வந்திருந்த ஸ்டாலின் பேசியதாவது:

மத்திய மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு எதிரான விரோத ஆட்சியை நடத்தி வருகின்றனஇந்த இரண்டு ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு திமுக உறுதுணையாக இருக்கும்..
மத்திய, மாநில அரசுகளை அகற்ற இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம். மே தினத்தை அரசு விடுமுறையாக முதன் முதலாக அறிவித்து திமுக அரசு தான். தமிழக அரசு போக்குவர்து ஊழியர்களுக்களின் பிரச்சனையில் தமிழக அரசுஅறிவித்துள்ள சம்பளத்தை பெற்றுக்கொள்ள ஊழியர்கள் தயராக இல்லை. அவர்கள் பிரச்சினை தீரும் வரை, எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வை திமுக எம்எல்ஏக்கள் 89 பேரும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Stalin Slams Centre And State On May Day Speech