முக்கிய செய்திகள்

ஆளுநர் இனி ஆய்வு நடத்தினால்…: ஸ்டாலின் சுர்ர்…

ஆளுநர் இனி எங்காவது ஆய்வுக்கு சென்றால், தாமே கருப்புக்கொடி காட்டப்போவதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

கரூரில் நடைபெற்ற திமுக மாணவரணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கட்சி தொடங்குவதற்கு முன்பே தான் தான் தலைவர் என சொல்லிக்கொண்டிருப்பவர்களை விமர்சிக்க தயாராக இல்லை என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், சைலண்ட் புல்லட்டை பயன்படுத்த அனுமதி அளித்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இனி ஆளுநர் எங்கு ஆய்வுக்குச் சென்றாலும், தாமே கருப்புக் கொடி காட்டப்போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Stalin Take a Call again On Governor