முக்கிய செய்திகள்

ராணுவ வீரர் அபிநந்தனை உடனடியாக மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய வீரர் அபிநந்தனை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேம்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள வீரர் அபிநந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரது மனநிலை எப்படி இருக்கும் என்பதை தாம் எண்ணிப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். அபிநந்தனை  தாமதமின்றி மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகைளையும் மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் அதில் வலியுறுத்தி உள்ளார்.