மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு…

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பேச்சை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறார். அனைத்து இந்திய மொழிகளிலும் SC தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற மாண்புமிகு தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

Image

இது உயர்நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையுடன், நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை நெருங்கச் செய்யும் என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நீதிமன்ற விசாரணையை நேரலை நிகழ்வாக வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது. மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, உச்சநீதிமன்ற விசாரணை நேரலையாக நிகழும்போது, சட்ட துறை ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் அதனை கவனித்து, விவாதத்தில் ஈடுபடலாம். இதுபோன்று நேரலையில் விசயங்களை விவாதிக்கும்போது, நமது சமூகத்தில் ஊடுருவியுள்ள அநீதியை நீங்கள் உணர முடியும் என்று கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், எங்களது அடுத்த கட்ட பணியானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நகல்களை ஒவ்வோர் இந்திய மொழியிலும் வழங்க இருக்கிறோம்.

நமது பொதுமக்கள் புரிந்து கொள்ள கூடிய ஒரு மொழியில் எங்களது தீர்ப்பு விவரங்கள் சென்றடையாவிட்டால், நாங்கள் மேற்கொள்ளும் பணியானது நாட்டின் 99 சதவீதம் மக்களை சென்று சேராது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். இந்நிலையில், மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Как выбрать лучшее онлайн-казино для игры в рулетку в Украине

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

Recent Posts