
காரைக்குடி,அக்.3- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரபு டெண்டல் மருத்துவமனை மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்பட 30மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பாடிபில்டர்ஸ் கலந்துகொண்டனர்.

போட்டியில் 70கிலோ முதல் 75கிலோ வரையும், 75முதல் 80கிலோ வரையும், 80க்கும் மேல் எடை பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றது.

இதுதவிர பாடி பில்டிங், மென்ஸ் பிரிவு, கிளாசிக் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாடி பில்டிங் ஆகிய பிரிகளாக மொத்தம் 20பிரிவுகளாக இந்த போட்டி நடைபெற்றது.
இதில் பாடிபில்டிங் டைட்டில் வின்னராக சென்னையைச் சேர்ந்த ராகேஷ் முதல் பரிசையும், கிளாசிக் மற்றும் மென்ஸ் பிரிவு வின்னராக சென்னையைச் சேர்ந்த ஜிம்மி ஆகியோரும் 2மற்றும் 3வது பரிசுகளை பெற்றனர்.

இதேபோல் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3இடங்களை பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாங்குடி,எம்.எல்.ஏ, நகர் மன்ற தலைவர் முத்துதுரை, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, பிரபு டெண்டல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் துரைகருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட பாடிபில்டிங் அசோசியேசன் தலைவர் மற்றும் பிரபு டெண்டல் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரபு, துணைத்தலைவர் ராமசாமி, பொது செயலாளர் கார்த்திகேயன்கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் திருப்பதி, பொருளாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் கமல்தயாளன் ஆகியோர் செய்திருந்தனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்