காரைக்குடியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி 2022 ஏப்ரல் 8,9,10 தேதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று ஏப்ரல்-9-ஆம் தேதி நடைபெற்ற 2-வது நாள் சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை மாண்புமிகு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் மண்ணின் பெருமை சொல்லும் உலகின் மூத்தகலை, முதற்கலை, போர்க்கலையின் தாய்க்கலை, தமிழர்களின் வீரக்கலையான சிலம்பக் கலையும் ஒன்றாகும்,
இத்தகைய சிறப்பு கொண்ட சிலம்பக் கலை இடையில் பெரும் தொய்வை சந்தித்தது. உடலும்,மனமும் ஒருங்கிணைத்து நோயற்ற பெருவாழ்வு வாழவைத்த தற்காப்பு கலை இது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழ்நாடு சிலம்பக் கழகம் மற்றும் சிவகங்கை மாவட்ட சிலம்பக் கழகம் இணைந்து 2002 -ஆம் ஆண்டிற்கான 40-வது மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்டப் போட்டி நேற்று ஏப்ரல்-8-ஆம்தேதி பி.எல்பி மகாலில் தொடங்கியது. தொடக்க விழாவில் தமிழக கூட்டுறவு சங்கங்கள் தேர்தல் ஆணையர் , இந்திய சிலம்ப சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் தலைவர் டாக்டர்.மு.இராஜேந்திரன் ஐஏஎஸ் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
நேற்று இரண்டாம் நாள் போட்டி நடைபெற்றது. மாண்புமிகு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் கலந்து கொணடு வீரர்களுக்குசு வாழ்த்து தெரிவித்து. தமிழக அரசு சிலம்பக் கலையை உலகெங்கும் பரவச் செய்ய ஊக்கமளிக்கும் என்றார்.
ஊரக உள்ளாட்சி துறை அமைச்சருடன், மானமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, திமுக இலக்கிய அணிச் செயலாளர் தென்னவன், காரைக்குடி நகர் மன்றத் தலைவர் முத்துதுரை, நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் சிலம்ப போட்டிகளை கண்டுரசித்தனர்.
இன்று இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளது. வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்