முக்கிய செய்திகள்

சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை : உள்துறை அமைச்சகம் உத்தரவு


திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு லெனின் சிலை இடிக்கப்பட்டது. அதுபோல் தமிழகத்தில் எச்.ராஜாவின் பதிவால் தமிழகத்தில் வேலுார் அருகே பெரியார் சிலையை சிலர் சோப்படுத்தினர். இதற்கு அரசியல் கட்சிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது சிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறித்தியுள்ளது.