ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாணவர்கள் போராட்டம்..


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில்இந்திய வாலிபர் சங்கம் சார்ப்பில் மாணவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரம் கிராமப் பகுதியில், வேதாந்தா குழுமத்திற்கு சொ ந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை வெளியிடும் நச்சு புகை காரணமாக இக்கிராம மக்கள், மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், கருச்சிதைவு, புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரைக் குடித்த ஆடு, மாடுகள் பல நோய்களுக்கு உள்ளாகி இறந்துள்ளன.

இந்நிலையில், சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது இரண்டாவது ஆலையை நிறுவ உள்ளது. புதிதாக நிறுவ உள்ள இந்த ஆலை, ஏற்கெனவே உள்ள ஆலையை விட நான்கு மடங்கு பெரியது.

இதனால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால், தூத்துக்குடி மக்கள் ஒன்றாக இணைந்து மாபெரும் போராட்டத்தைகையில் எடுத்தனர். கடந்தபிப்ரவரி 12 ஆம் தேதி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் கிராமமக்கள் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுவை பேரவையில் தீர்மானம்

நியமன எம்எல்ஏக்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு : அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

Recent Posts