ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு..

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்பாயத்தில் முறையிட்டது.

பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையை திறக்கும் உத்தரவுக்கு தடைவிதித்தது.

லை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் எனத் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது ஆலை நிர்வாகம்.

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்

Recent Posts