முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை?: வைகோ கேள்வி

தமிழக முதல்வர் அமைச்சரவையை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதிமுக முன்னாள் மீனவரணி செயலாளர் தர்மம் இல்ல திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட வைகோ, மணமணக்களுக்கு மாலை எடுத்து கொடுத்து, திருக்குறள் புத்தகத்தை பரிசாக அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஆனால் ஆலையே திறக்கமுடியாது. இந்த வழக்கு மூன்று அல்லது நான்கு வாரங்களிலோ மீண்டும் வரலாம். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையே எதிர்த்து கடந்த 22 ஆண்டுகளாக போராடி வருகிறேன் என்று என் மனதுக்குள் பெருமை படுகிறேன்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செல்பவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை முதலமைச்சர் அமைச்சரவையே கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஏன் கொள்கை முடிவு எடுக்கவில்லை.

எது தடுக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக இயக்குனர் அனில் அகர்வால் என்னை சந்திக்க பலமுறை முயற்சித்தார். ஆனால் நான் சந்திக்கவில்லை.

இடஒதுக்கீடு விவகாரத்தை போகிற போக்கில் விட்டு வேடிக்கை பார்கின்றார் மோடி. அதனால் பிஜேபி வலையில் கூட்டணி கட்சிகள் விழுந்து விட்டனர். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.