முக்கிய செய்திகள்

அன்பு செழியனால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் …


M.Manikandan @ Kaaka Muttai Movie Audio Launch Stills

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கந்துவட்டி கொடுமை தான் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டுவரும் நிலையில், அவரால் நடுத்தெருவுக்கு வந்த காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் பற்றிய அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது .
ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
தனியாக சம்பளம் ஏதும் பேசாமல் லாபத்தில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் அன்புச்செழியன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்ற நிலையில் தன் 40% பங்கை இயக்குனர் கேட்டிருக்கிறார், ஆனால் படம் ஓடவில்லை என கூறிவிட்டாராம் அன்புச்செழியன்.
பின்னர் படத்தின் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை விற்று அதிக பணம் ஈட்டியுள்ளார் அன்புச்செழியன். இருப்பினும் தற்போதுவரை மணிகண்டனுக்கு தர வேண்டிய காசை கொடுக்கவில்லையாம், முறையான கணக்கும் காட்டவில்லையாம்.
இதனால் தற்போது பணகஷ்டத்தில் இருக்கும் மணிகண்டன் ஸ்க்ரிப்ட் எழுதுவது போன்ற சின்னசின்ன வேலைகளை செய்து வருகிறார். அத்யாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால், தான் வாங்கிய சில சினிமா உபகரணங்களையும் விற்றுவிட்டாராம்.