முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய எதிரி சாதி தான்: கமல்..


தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் பயணம் தொடங்கிவிட்டது என்றும் உழவுக்கு வந்தனை செய்யும் படை ‘ நாளை நமதே’ என்று கூறி புறப்படத் தயாராகிவிட்டது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.ஆர்வம் கொண்டவர்கள், நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். விருப்பமில்லாதவர்கள் எங்களுக்கு வழிவிடுங்கள், உங்களை பிறகு இணைத்துக்கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டிய வேளாண்துறை, ஆவணங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது என்றும் கிராமங்களில் பொதுக்கழிப்பிடங்களை பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து வீடுகளிலும் ஏற்கனவே கழிப்பிடம் இருந்தால் பிறகு எதற்கு பூட்டிய பொதுக்கழிப்பிடங்கள் என்றும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியே கழிப்பறை கட்ட மானியம் வழங்க ஊக்கப்படுத்தலாமே என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க கல்வித்துறை போட்டிபோடுகிறது என்றும் வெற்றிக்கான வாழ்க்கைக் கல்வியை விவசாயிகளின் பிள்ளைகளுக்கு எப்போது கற்பிக்கப்போகிறோம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தேர்தல் பாதைப் பயனுக்காக சாதியை பாதுகாத்து வருகிறார்கள் என்றும் பல மாணவர்களுக்கும், என் விவசாயிகளுக்கும் மிகப்பெரிய எதிரியாக நிற்பது சாதி தான் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.