காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு :விழாக் கோலம் பூண்ட காரைக்குடி..

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடை பணியாளர் துறை நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நிலையில் இன்று அதிகாலை முதலே காரைக்குடி கல்லுாரி சாலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்காக கூடினர்.

இவர்களின் கூட்டம் காரைக்குடியில் ஏதோ விழா நடப்பது போல் தோற்றமளித்தது.
காரைக்குடிஅழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் 800 பேரும், உமையாள் ராமநாதன் கல்லுாரியில் 800 பேரும், அழகப்பா பொறியியல் தொழில் நுட்ப கல்லுாரியில் 1283 பேரும்,அழகப்பா மேனேஸ்மென்ட் கல்லுாரியில் 700 பேரும், அகழப்பா செயின்ஸ் கேம்பஸில் 500 பேரும் ஆக மொத்தம் 4083 பேர் தேர்வு எழுதுகின்றனர்., இவர்களில் 800 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று காலை முதலே இளைஞர்கள் காரைக்குடியில் கூடியதால் காரைக்குடி நகரே திருவிழா நடப்பது போல் காணப்பட்டது.


தேர்வு நடைபெறும் பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 700 ககாவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களாக செயல் பட்டு வருகின்றனர்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்

கவியரசர் கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் : காரைக்குடியில் அமைச்சர்கள் மரியாதை..

உலகை வெல்லும் இளைய தமிழகம் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்…

Recent Posts