சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..

சூடானில் (Sudan) உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் நடந்த எல்பிஜி டேங்கர் வெடிதத்தில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டனர்.

அதில் இந்தியாவை (Indians) சேர்ந்த 18 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இந்திய மிஷன் (Indian mission) இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

கார்ட்டூமில் (Khartoum) பஹ்ரி பகுதியில் உள்ள சீலா பீங்கான் தொழிற்சாலையில் (Seela Ceramic Factory) நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சம்பவத்திற்கு பின்னர் 16 இந்தியர்கள் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“சமீபத்திய அறிக்கைகளின்படி, இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப் படுத்தப்படவில்லை. அனால் 18 பேர் இறந்துவிட்டனர்” என்று இந்திய தூதரகம் (Indian Embassy) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த விபத்தில் காணாமல் போனவர்களில் சிலர் இறந்தவர்களின் பட்டியலில் இருக்கலாம். ஏனெனில் உடல்கள் முழுவதும் எரிந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று அறிக்கையில் கூறியுள்ளது.

இன்று (புதன்கிழமை) இந்திய தூதரகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன அல்லது இந்த விபத்தில் இருந்து தப்பிய இந்தியர்களின் விரிவான பட்டியலை வெளியிட்டது. அந்த தரவுகளின்படி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த விபத்தில் இருந்து தப்பிய முப்பத்து நான்கு இந்தியர்கள் சலூமி மட்பாண்ட தொழிற்சாலை (Saloomi Ceramics Factory) இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சூடான் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.